maatram.org
banner
maatram.bsky.social
maatram.org
@maatram.bsky.social
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்தக் கருத்துக்கள். maatram.org/articles/12455

by V. Thanabalasingham

#SriLanka #LTTE #MaaveerarNaal
December 5, 2025 at 5:20 PM
பலியானோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்தது.

நிலவர அறிக்கை (05.12.2025, 6.00pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 5, 2025 at 2:51 PM
அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. maatram.org/articles/12449

#lka #SriLanka #MalaiyahaTamil
December 3, 2025 at 11:31 AM
யார் எச்சரிக்கப்படுகிறார்கள்? இலங்கையில் மொழி சார்ந்த பாகுபாடு மற்றும் பேரிடர் தொடர்பாடல் maatram.org/articles/12442

by Sanjana Hattotuwa

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 12:58 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை

www.facebook.com/share/p/1BSA...

#lka #SriLanka
November 28, 2025 at 8:12 AM
சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. maatram.org/articles/12438

by V. Thanabalasingham

#lka #SriLanka
November 26, 2025 at 10:46 AM
தொல்பொருள் திணைக்களம் புத்த சாசன அமைச்சிலிருந்து தனியான ஒரு சுயாதீனமான நிறுவனமாக நிறுவப்படவேண்டும். அதன் செயற்பாடுகள் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெற பொதுமக்களின் கருத்துகளையும் புகார்களையும் பெறுவதற்கான முறையான அமைப்பை உருவாக்கவேண்டும் - சம உரிமை இயக்கம் புத்த சாசன அமைச்சிடம் கோரிக்கை
November 25, 2025 at 11:47 AM
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. maatram.org/articles/12431

#lka #SriLanka
November 25, 2025 at 8:37 AM
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரை: நீதவான் விஹாராதிபதிக்கு உத்தரவு

#lka #SriLanka #Trinco
November 20, 2025 at 6:11 AM
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கக் காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நேர்ந்த கதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களுக்கு நேராது என்று நம்புவோமாக. maatram.org/articles/12427

by V. Thanabalasingham

#lka #SriLanka
November 19, 2025 at 11:39 AM
மலையகத் தமிழர்கள் கௌரவமான முறையில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை சட்டபூர்வமாக அங்கீகரிக்குமாறும் சுயாதீனமாக பொது மயான பயன்பாட்டு உரிமையை உறுதிசெய்யுமாறும் கோரி iPen நிறுவனத்தின் பணிப்பாளர் ஜீ. சுரேஷ்குமார் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத்தாக்கல்

maatram.org/wp-content/u...

#MalaiyahaTamil
November 18, 2025 at 12:16 PM
மலையகத்தில் தனியார் டியூசன் முறை maatram.org/articles/12422

#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Education
November 18, 2025 at 7:43 AM
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு சர்வஜன நீதி அமைப்பு வேண்டுகோள்

#lka #SriLanka #PTA
November 14, 2025 at 10:11 AM
நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத் தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும்.

maatram.org/articles/12419

#lka #SriLanka #13thAmendment
November 14, 2025 at 9:51 AM
மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழராகப் பதிவுசெய்து கொண்டமை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் வெளிப்படையான விவாதங்களை நடத்தவில்லை. இது, அடையாள மாற்றத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொண்டதன் விளைவா அல்லது வாக்கு வங்கி மீதான அச்சமா என்ற கேள்வி எழுகிறது. maatram.org/articles/12402

by Dr. Ramesh Ramasamy & Arul Karki

#lka #SriLanka #MalaiyahaTamil #MalaiyagaTamil
November 12, 2025 at 7:07 AM
இன சுத்திகரிப்பினை தூக்கிப்பிடிக்கும் ஆர்வலர்கள் இனவழிப்பினை குறித்தும் ஒப்பீட்டளவில் கனதியான இனவழிப்பின் விளைவுகள் குறித்தும் கண்டுகொள்ளாமல் போவது ‘புலிகள்’ சம்மந்தப்படாமல் இருப்பதாலா அல்லது கிழக்கில் கொலைகள் நிகழ்த்தப்பட்டதால் அதனை குறித்து பேசும் போது முஸ்லிம்களை பகைக்க வேண்டியிருக்கும் என்பதாலா? maatram.org?p=12397

#lka #SriLanka #Genocide #JaffnaMuslims
November 11, 2025 at 8:23 AM
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 19ஆம் ஆண்டு நிறைவு

#lka #SriLanka #NadarajahRaviraj #Impunity
November 10, 2025 at 8:23 AM
செம்மணி மனித புதைக்குழியில் மீட்கப்பட்ட 25ஆவது சான்று பொருளான செருப்பு 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ‘பாட்டா’ நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு www.virakesari.lk/article/229653

#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves 📷
Prabhakaran Dilakshan
November 7, 2025 at 7:22 AM
CWC, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்கிறது. maatram.org/articles/12394

by V. Thanabalasingham

#lka #SriLanka
November 4, 2025 at 8:02 AM
ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் நேற்றாகும்.

2013 நவம்பர் 2 மாலியில் கொல்லப்பட்ட பிரான்ஸைச் சேர்ந்த 2 ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாகவே இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

#lka #SriLanka #EndImpunity
November 3, 2025 at 11:24 AM
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமங்களில் நடந்த படுகொலைகளில் இலங்கை அரசுடன் இணைந்த முஸ்லிம் ஊர்க்காவலர்களின் பங்குக்கு எதிர்வினையாகவே வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று சிலர் வாதிடுகின்றனர். maatram.org/articles/12390

by Mahendran Thiruvarangan

#lka #SriLanka #EvictionofMuslims
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்
Photo, Transcurrents இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட‌ பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தம…
maatram.org
November 3, 2025 at 10:29 AM
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்

maatram.org/articles/12390

#lka #SriLanka #EvictionofMuslims
October 31, 2025 at 2:07 PM
கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த - காணியுரிமை மறுக்கப்பட்ட 37 அப்பாவி மலையத் தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

#lka #srilanka #Meeriyabeddha #Koslanda
October 29, 2025 at 9:01 AM
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்… maatram.org/articles/12376

by Environmental activist Sajeewa Chamikara

#lka #SriLanka #SaveMannar #Mannar
October 27, 2025 at 12:28 PM
அவர் சிறுவயதாக இருந்தபோது, அவரும் ஏனைய தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தோட்ட உரிமையாளரின் மகளுடன் சென்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் செல்லாவிட்டால் தாக்கப்படுவார்கள் என்று வள்ளியம்மா நினைவு கூருகிறார். தனது பெற்றோர் முன்னிலையில் குறைந்தது இரண்டு முறையாவது தாக்கப்பட்டதை அவர் நினைவு கூருகிறார். maatram.org/articles/12370

#Hammeliyawatte #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Gall #மலையகம்
ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்
Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில…
maatram.org
October 24, 2025 at 7:36 AM