Daily Dews of Hope
dailydewsofhope.bsky.social
Daily Dews of Hope
@dailydewsofhope.bsky.social
12 followers 2 following 2.3K posts
Daily Dews of Hope posts devotionals to help you refresh, refocus, and renew your faith and hope in Jesus Christ.
Posts Media Videos Starter Packs
வாழ்க்கையின் நிழல்களான நிச்சயமற்ற தன்மை, துக்கம், தேவைகள் சூழ்ந்திருக்கும்போது - கர்த்தருடைய பிரசன்னம் உன் பாதையை ஒளிரச் செய்யும்.
அவரது ஒளி உனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றி, ஒரு காலத்தில் போராட்டத்தை மட்டுமே கண்ட இடத்தில் உன்னை பிரசித்தப்படுத்தும்.
தேவ பிரசன்னம் உன்னை சூழ்ந்த நிழல்களை விரட்டும்.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தரே,
ஒவ்வொரு நாளையும் உமது தெய்வீக வழிகாட்டுதலுக்காக காத்திருந்து தொடங்கக் கற்றுத் தாரும்.
உமது சமுகத்தில், பெலத்தையும் முடிவில்லா இரக்கத்தையும் காண்கிறோம்.
உமது மென்மையான அன்பினால், இருளின் ஆழத்திலிருந்து காப்பாற்றும்.
உமது தயவு எங்களுக்கு முன்சென்று வழி நடத்தட்டும்.
ஆமென்.
📖எண்ணாகமம் 6:25
-
கர்த்தர் தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார்.
காலையிலே கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து ஆயத்தமாகி அவருக்காய் காத்திரு.
அவர் உன் ஜெபத்தை கேட்டு தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து பதிலருளுவார்.
கர்த்தர் தமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி உன்னை இருளிலிருந்து இரட்சிப்பார்.
When life's shadows of uncertainty, grief or overwhelming demands surrounds you—the Lord's radiant face will illuminate your path, transform your journey, revealing beauty where you once saw only struggle.
Just like the sunrise dispels the darkness, God's presence can banish the shadows in your life
Prayer:
Dear Lord,
Teach us to begin our day waiting for Your divine guidance.
In Your presence, we find strength and unending mercy.
In Your tender love, save us from the depths of darkness.
May Your favour go before us, guiding our way.
Amen.
📖Numbers 6:25
-
The Lord wants to bless His children.
Get prepared and sit at the Lord's feet in the morning and wait expectantly.
He will hear your prayer and answer you from His holy mountain.
The Lord will make His face shine on you and save you from the darkness
-
#DailyDewsofHope #DailyDevotion
தேவனை மகிமைப்படுத்தும் தாராள மனப்பான்மை சாதாரண தருணங்களை பரிசுத்த காணிக்கையாக மாற்றுகிறது.
நமது நேரம், வளங்கள், இரக்கம் எதுவாக இருந்தாலும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது, ​கிறிஸ்துவின் இதயத்தை பிரதிபலிக்கிறோம்.
இந்த தன்னலமற்ற செயல்கள் உரக்க பேசும் உயிருள்ள சாட்சிகளாகின்றன.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தரே,
நீர் எமக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எங்களின் பெருந்தன்மை உமது அன்பையும் கிருபையையும் பிரதிபலிக்கட்டும்.
பூமிக்குரிய அங்கீகாரத்தையும் வெகுமதியை நாடாமல் சேவை செய்ய உதவும்.
கலப்படமில்லா விசுவாசத்துடன் உமக்காக உண்மையாக வாழ பெலப்படுத்தும்.
ஆமென்.
📖லூக்கா 6:38
-
நம் கர்த்தரை மகிமைப்படுத்தும் உதாரத்துவம் அவசியமானது.
நீதிமான்களின் உயிர்தெழுதலில் நன்மையுண்டாக பிறருக்கு எதிர்பாரா நன்மை செய்.
சகலவித நற்கிரியைகளிலும் கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்ந்திடு.
இலவசமாய் இரட்சிப்படைந்த நாம் நிறைவாய் பெற்ற ஆசீர்வாதங்களை தாராளமாய் பிறருக்கு பகிர்ந்தளிப்போம்.
Generosity that glorifies God transforms ordinary moments into sacred offerings.
When we give without expectation of return—whether our time, resources, or compassion—we mirror the heart of Christ.
These selfless acts become living testimonies that speak louder than any words we could utter.
Prayer:
Dear Lord,
We are grateful for the blessings You bestow upon us.
May our generosity reflect Your love and grace.
Help me serve without seeking earthly approval or reward.
We pray for the strength to live faithfully for You with undiluted faith.
Amen.
📖Luke 6:38
-
Have generosity that glorifies the Lord.
Be rewarded at the resurrection of the righteous, by doing good for others without expecting.
As witnesses of Christ let's live flawlessly in all our good deeds.
We are saved freely by grace and let us generously share our blessings with others.
விசுவாசம் என்பது தேவனை நம்பி சரணடைவது - வெறும் நம்பிக்கை அல்ல.
ஒவ்வொரு நிச்சயமற்ற தருணத்தையும் அவரிடம் ஒப்படை.
உனது நாளை ஒரு பரிசுத்த காணிக்கையாக அணுகு - ஒவ்வொரு வார்த்தை, தேர்வு மற்றும் செயல் - கர்த்தருடைய நோக்கத்தால் நிரப்பப்பட்டது என அறி.
அவரது பார்வையில், சிறிய விசுவாசம் கூட ஒரு பிரகாசமான ஒளி.
இன்றைய ஜெபம்:
அன்புள்ள கர்த்தரே,
என்னை பெயர் சொல்லி அறிந்ததற்கு நன்றி.
உமது திட்டங்களை விசுவாசிக்க எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
உமக்கு உண்மையாக ஊழியம் செய்ய என் இதயத்தைப் பலப்படுத்தும்.
இறுதிவரை, நான் உம்மில் நிலைத்திருந்து, உமது திருநாமத்தை மகிமைப்படுத்த கிருபையருளும்.
ஆமென்.
📖யாத்திராகமம் 33:17
-
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்து அறி.
எதைச் செய்தாலும் கர்த்தரை மகிமைப்படுத்த அவருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்.
உன்னைப் பேர்சொல்லி அழைத்த தேவனுக்கு முடிவுப்பரியந்தம் உண்மையாய் இரு.
Faith is trusting and surrendering to God —not merely belief.
It’s taking your each uncertain moment and placing it in His hands.
Approach your day as a sacred offering—each word, choice, and act infused with His purpose.
In His eyes, even the smallest faith is a radiant light.
Prayer:
Dear Lord,
Thank You for knowing me by name.
Instill in me the faith to trust Your plans.
Strengthen my heart to serve You faithfully.
Until the end, let me abide in You and glorify Your Holy Name.
Amen.
📖Exodus 33:17
-
Without faith, it is impossible to please God.
Find out and know what pleases the Lord.
Whatever you do, to glorify God, work at it with all your heart, as if you are working for Him.
Until the end, be faithful to the God who has called you.
-
#DailyDewsofHope
post.dewsofhope.ca/301e
தேவன் தம்முடையவர்களிடம் பேசுகிற குரல் எப்போதும் இடிமுழக்கமாக இருக்காது; சில நேரங்களில் அது உனது நாளை வழிநடத்தும் வேதவார்த்தையாகவோ அல்லது ஒரு நண்பரின் சரியான நேரத்தில் வரும் ஆலோசனையாகவோ இருக்கும்.
கேட்கக் கற்றுக்கொள்ளும்போது, நம்மை ​​வழிநடத்தி, நிலைநிறுத்தி ஒன்றிணைக்கும் கர்த்தரின் அன்பைக் காண்போம்.
இன்றைய ஜெபம்:
அன்புள்ள கர்த்தரே,
உமது தொனிக்கு என் இதயம் திறந்திருக்க அருளிச்செய்யும்.
என் செயல்களும் எண்ணங்களும் எல்லா வகையிலும் உமக்குப் பிரியமாக இருக்க கிருபையருளும்.
உமது கட்டளைகளை பின்பற்றும்போது கீழ்ப்படிதலில் எம்மை வழிநடத்தும்.
எங்கள் வாழ்வின் எல்லாவற்றிலும் உமது அன்பு மேலோங்கட்டும்.
ஆமென்.
📖யோவான் 8:47
-
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவர்கள் தேவனால் பிறந்தவர்கள்.
கிறிஸ்துவையுடைவர்கள் அவரில் அன்புகூர்ந்து அவருக்கு செவிகொடுக்கிறார்கள்.
தேவனிடத்தில் அன்புகூரும் எவரும் தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறார்கள்.
தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பவர்கள் அன்பே பிரதானம் என்றறிவார்கள்
God speaks to those who are His.
His voice isn’t always thunderous; sometimes it’s a quiet nudge, a Scripture that guides your day, or a friend’s timely words.
When we learn to listen, we discover a love that guides, sustains, and unites.
Prayer:
Dear Lord,
Lead my heart to be open to Your voice.
Let my actions and thoughts in every way be pleasing to You.
Guide us in obedience as we follow Your commands.
Let Your love prevail in every aspect of our lives.
Amen.
📖John 8:47
-
Everyone who believes that Jesus is the Christ is born of God.
Those who have Christ living in them love Him and listen to His words.
By loving God and carrying out His commands we love the children of God.
Those who believe God's word knows that Love prevails over everything.
தேவனிடம் திரும்புவது, அவருடன் நாம் நடந்து செல்லும்போது அனுபவித்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் மீண்டும் நாடுவதாகும்.
தேவனின் கரங்கள் எப்போதும் நம்மை வரவேற்க காத்துநின்று குணப்படுத்த மீட்டெடுக்க தயாராக உள்ளது.
ஒவ்வொரு காலையிலும் புதிய கருணையுடன் நாம் இருக்கும் இடத்திலேயே நம்மைச் சந்திக்கும் தேவன் அவர்