பொங்கலுக்கு முன் ரேஷன் வீட்டுக்கு – இலவச வேட்டி, சேலை அறிவிப்பு… மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்!
முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்க உள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் நவம்பர் 3 முதல் 6 வரை அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் 990 நியாய விலைக் கடைகள் வழியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.